பதிவு செய்த நாள்
05
ஜூலை
2014
12:07
கேளம்பாக்கம்:கொளத்தூர் ரங்கநாயகி சமேத கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் மஹா சம்ப்ரோக் ஷணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.கேளம்பாக்கம் அடுத்த கொளத்தூரில், 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சகோதர ஒற்றுமைக்காக, ஆண்டாள் கனுப்பொடி வைத்து வழிபட்டுள்ளார். மேலும் திருவிடந்தை பெருமாள் பரிவேட்டை தலமாகவும் இருந்து வருகிறது. இக்கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணி, கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. மேலும் சுவாமி, தாயார் சன்னிதி, ஆஞ்சநேயர், கருடன், கொடிமரம் பணிகளும் நடந்தன.திருப்பணிகள், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்டு, நூதன ராஜகோபுரம் மற்றும் சன்னிதி விமானங்களின் மஹா சம்ப்ரோக் ஷணம், நேற்று காலை 9:00 மணிக்கு நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த 2ம் தேதி வாஸ்து ஹோமம், சாற்றுமறை நடந்தது.நேற்று காலை 8:00 மணிக்கு கும்ப புறப்பாடும், 9:00 மணிக்கு மஹாசம்ப்ரோக் ஷணமும், 10:00 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், மாலை 6:00 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடந்தது.