பதிவு செய்த நாள்
05
ஜூலை
2014
12:07
வெண்மணம்புதூர்: வெண்மணம்புதூர், சுகுந்த குந்தலம்பாள் உடனுறை விபூதீஸ்வரர் கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.கடம்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, வெண்மணம்புதூரில் சுகுந்த குந்தலம்பாள் உடனுறை விபூதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், நேற்று காலை 9:30 மணிக்கு நடந்தது.அதன்பின், கோவில் வளாகத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகன், அய்யப்பன், துர்க்கை, நவக்கிரகம், சண்டிகேஸ்வரர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேக தீபாராதனையும், தீர்த்த வினியோகமும் நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பத்திரப்பதிவு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ரமணா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அதன் பின், மாலை 6:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடந்தது.