பதிவு செய்த நாள்
05
ஜூலை
2014
01:07
உடுமலை வாளவாடி கருப்புராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. உடுமலை, வாளவாடி, வாய்க்கால் மேட்டில் அமைந்துள்ளது, கருப்புராய சுவாமி, கன்னிமார் சுவாமிகள் கோவில், இக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் மாலை, விநாயகர் வழிபாடு, வாஸ்துசாந்தி, முதல் கால யாக பூஜையுடன் துவங்கியது. நேற்று அதிகாலை 4.00 மணிக்கு, பஞ்சலோக பிரதிஷ்டையும், 6.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தன. காலை 9.00 மணிக்கு, கடங்கள் புறப்பட்டு, கோவிலை வலம் வந்தன. 9.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.