பதிவு செய்த நாள்
05
ஜூலை
2014
01:07
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே, நாட்டராயசுவாமி, நாச்சிமுத்துசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும், ஒன்பதாம் தேதி நடக்கிறது. இதற்கான யாகசாலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் காலை, காலை மங்கள இசையுடன், விக்னேஷ்வரபூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை, 9.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனையும், 7ம் தேதி மாலை, 5 மணிக்கு காப்பு அணிவித்தல், முதற்கால யாகபூஜை துவங்குகிறது. இரவு, ஏழு மணிக்கு, அனைத்து கோபுரங்களுக்கும், கோபுரகலசம் ஸ்தாபதம் நடக்கிறது.வரும், எட்டாம் தேதி காலை, 8.30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, மாலை, 5.30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை நடக்கிறது. ஒன்பதாம் தேதி, அதிகாலை நான்காம் கால யாகபூஜையும், கலசம் ஆலயம் வலம் வருதல், காலை, 6.10 மணிக்கு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீநாட்ராயசுவாமி, ஸ்ரீநாச்சிமுத்துஅய்யன், விமானம் மற்றும் அனைத்து பரிவாரகோபுரங்களுக்கும், சமகாலத்தில், மஹாகும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, பத்து மணிக்கு தசதரிசனம், கோ தரிசனம், முளைப்பாரி கரைத்தல் நடக்கிறது. கும்பாபிஷேகம் அன்று காலை முதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை காணியாளர் மேட்டுப்பளையம் சக்திவடிவேல் தலைமையில், கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.