சாத்தூர்; சாத்தூர் வெங்கடாஜலபதி கோயில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு, ரங்கநாதபட்டர் கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து, விழா கொடியை ஏற்றினார். தக்கார் முருகன், கோயில் நிர்வாக அதிகாரி (கூடுதல் பொறுப்பு) ராமராஜா மற்றும் பெரிய கொல்லபட்டி, அணைக்கரைபட்டி, சடையம்பட்டி, படந்தால், மற்றும் சாத்தூர் சுற்றுக்கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 12 தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.