பதிவு செய்த நாள்
05
ஜூலை
2014
02:07
பழநி:பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், வருடாபிஷேக யாகபூஜை மற்றும் ஆனிதிருமஞ்சன விழா நடந்தது.ஆனிதிருமஞ்சன விழாவை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோயிலில், அதிகாலை 4 மணிக்கு நடராஜர், சிவகாமி சன்னதி திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. புதிய பட்டுஉடுத்தி பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. வருடாபிஷேக விழா வை முன்னிட்டு, முத்துக்குமாரசுவாமி, வள்ளிதெய்வானை சன்னதி முன்மண்டபத்தில் கலசங்கள் வைத்து, சிறப்புயாகபூஜை நடந்தது.பின் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மகாதீபாராதனைகள் நடந்தது. பழநிகோயில் உதவி ஆணையர் மேனகா, பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.