கடலூர் சக்கரத்தாழ்வார் கோவிலில் மகா சுதர்சன ஹோமம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2014 12:07
கடலூர்: அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவிலில், மகா சுதர்சன ஹோமம் நடந்தது. உலக நன்மை வேண்டி கடலூர், அரிசிபெரியாங்குப் பத்தில் உள்ள விஜயவல்லி தாயார் சமேத சக்கரத்தாழ்வார் கோவிலில், மகா சுதர்சன ஹோமம் நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று காலை புண்யாஹவசனம், பகவத் அனுக்ஞை, விஷ்வக்ஷேன ஆராதனம், சங்கல்பம், கலச ஆவாஹணம், மகா சுதர்சன ஜபம், ஹோமம் நடந்தது. தொடர்ந்து, பூர்ணாகுதி சேவை சாற்றுமுறை நடந்தது.