பதிவு செய்த நாள்
07
ஜூலை
2014
04:07
சென்னிமலை: ஆதி பழனி என, அழைக்கப்படும், ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், காலை கும்பாபிஷேக விழா நடந்தது. அரோகரா கோஷம் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. மிகப்பழமை வாய்ந்த சென்னிமலை கோவில், கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய கோவிலாகும். இங்கு, கடந்த, 22 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், கடந்த, பத்தாண்டுகளுக்கு முன், கும்பாபி ஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணி துவங்கியது. தற்போது, 10 கோடி ரூபாய் மதிப்பில், அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் மூலம், திருப்பணி நிறைவு பெற்றது.
கடந்த, புதன் கிழமை காலை, விக்னேஸ்வர பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. 60 யாக குண்டம் அமைக்கப்பட்டு, ஆறு கால யாக ÷ வள்வி பூஜையில், முதல் கால யாகவேள்வி, கடந்த, வெள்ளிக்கிழமை துவங்கியது. அதிகாலை பரிவார யாகசாலை பூஜைகள் நடந்து, காலை, 6.20 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 9 மணிக்கு, யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு, 9.45 மணிக்கு, மூலவர் விமானம், மார்க்கண்டேஸ்வரர், உமையவள்ளி கோபுரங்கள், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி கோபுரங்கள். புதிய ஐந்து நிலை ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு, சமகாலத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. அங்கு திரண்டு இருந்த, லட்சக்கணக்கான பக்தர்கள், முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என, கோஷம் எழுப்பினர். அப்போது, ஹெலிக்காப்டரில் இருந்து, கோபுரங்கள் மீதும், பக்தர்கள் மீது பூ துõவப்பட்டது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், எம்.எல்.ஏ.,க்கள் நடராஜ், ரமணீதரன், நாராயணன், ராமலிங்கம், சந்திரகுமார், ஈரோடு துணை மேயர் பழனிசாமி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் யு.ஆர்.சி., கனகசபாபதி, மாவட்ட கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.