திருப்பூர் : கருவறைக்குள் பக்தர்கள் சென்று சுவாமியை தரிசனம் செய்யும் ஆஷாட ஏகாதசி விழா நேற்று, ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மணி சன்னதியில் நடந்தது. திருப்பூர், ராஜவிநாயகர் கோவிலில் உள்ள ஸ்ரீ பாண்டுரங்கன், ருக்மணி சன்னதியில், பக்தர்கள் கருவறைக்குள் சென்று, சுவாமியை தரிசனம் செய்யும், ஆஷாட ஏகாதசி விழா நேற்று நடந்தது. காலை 6.00 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கிய விழாவில், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கருவறைக்குள் சென்று சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.காலை 9.00 மணிக்கு, சேக்கிழார் புனித பேரவை உறுப்பினர்கள் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் மேற்கொண்டனர்.