பதிவு செய்த நாள்
10
ஜூலை
2014
02:07
கும்பகோணம்: ஆடுதுறை அருகே உள்ள சாத்தனூர் ஐராவதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு, வேலூர் வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய பீட தலைவர் முரளிதர சுவாமிகள், ஆடுதுறைக்கு வந்து அருளாசி வழங்கினார். அப்போது, அவர் கூறியதாவது: உலக மக்கள் நன்மைக்காகவும், மக்களுக்கு நோய் வராமல் பாதுகாக்கவும் ஆகஸ்ட், 14ம் தேதி முதல், 17ம் தேதி முடிய, வேலூர் வாலாஜாவில், 51 சக்தி பீட மகா மாத்ருகா ஹோமங்கள் நடத்தப்படுகிறது. 51 கோவில்களை மட்டும், அட்சர சக்தியின் பீடங்கள் என்று போற்றி வருகிறோம். இந்த, 51 புனித பீடங்களை, தமிழகத்தில், ஒரே இடத்தில் தரிசித்து அன்னையின் அருளை பெற, மாபெரும் யாகத்தை செய்ய உள்ளோம். சக்தி பீடம் ஹோமங்கள் சிறப்பாக நடைபெறவும், சக்திதேவியின் அருள் பரிபூரணமாக கிடைப்பதற்காகவும் காஞ்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அம்பாள் மற்றும் தெய்வசன்னதிகளுக்கு சென்று, சக்தி தேவிகளை யாகத்திற்கு அழைக்கும் விதத்தில் தரிசனம் செய்து வருகிறேன். கும்பகோணத்தில் உள்ள அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி, பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன், கதிராமங்கம் வனதுர்காதேவி கோவில்களுக்கு சென்று வந்தேன். பழமை வாய்ந்த ஐராவதீஸ்வரர் கோவிலுக்கும் வந்து தரிசனம் செய்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.