பல்வேறு வண்ணங்களில் மின்னொளியில் மின்னும் பழநி ராஜகோபுரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2025 10:12
பழநி; பழநி முருகன் கோயில் அமைக்கப்பட்ட மின்னொளியில் பல்வேறு வண்ணங்களில் இரவு நேரத்தில் ராஜகோபுரம் ஒளிர்கிறது. பழநி முருகன் கோயிலில் ராஜகோபுரத்தில் ரூ.30 லட்சம் செலவில் வண்ண மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் பல்வேறு வண்ணங்களில் மின் விளக்கு ஒளியில் ராஜகோபுரம் முழுமையும் பிரகாசுக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. தொலைவில் இருந்து மலைக்கோயிலை பார்க்கும்போது இரவு நேரத்தில் ராஜ கோபுரம் வண்ணங்களுடன் ஒளிர்வது தெரிகிறது, மின்னொளியில் ராஜகோபுரம் மின்னுவது போல் அமைந்துள்ளது.