திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் டிச., 20ல் பகல் பத்து உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2025 12:12
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 44 வதாக திகழ்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய பகல் பத்து உற்ஸவம் வைகுண்ட ஏகாதசி, இராபத்து உற்ஸவம் உள்ளிட்டவைகள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வருகிற டிச., 20 சனிக்கிழமை அன்று பகல் பத்து உற்ஸவத்தின் முதல் நாள் துவக்கமாகிறது. வருகிற டிச., 30 செவ்வாய்க்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அன்று காலை 10:00 மணிக்கு சயன திருக்கோலம், விஸ்வரூப தரிசனம், இரவு 7:00 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் டிச., 31 முதல் ஜன., 2026, 8 வரை இராப்பத்து உற்ஸவம் நிகழ்கிறது. அச்சமயங்களில் திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களும் திருவாய்மொழி சாற்று முறை கோஷ்டி பாராயணம் நம்மாழ்வார் பெருமாள் திருவடி தொழுதல் உள்ளிட்டவைகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை திருப்புல்லாணி கோயில் சரக பொறுப்பாளர் கிரிதரன் மற்றும் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.