மகாதேவா அஷ்டமி விழா; கோவையில் ருத்ர ஜபம், சங்கல்ப பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2025 10:12
கோவை மாவட்ட தாம்பிராஸ் பிராமணர்கள் சங்கம் சார்பில் மகாதேவா அஷ்டமி விழா, இடையர்பாளையம் வி. ஆர். ஜி. கல்யாண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கோவை இடையர்பாளையம் வி. ஆர். ஜி. கல்யாண மண்டபத்தில் நடந்தது. வருடம் தோறும் கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று வரும் வைக்கத்து அஷ்டமியை மகா தேவ அஷ்டமி என்று அழைக்கிறோம். இந்த நன்னாளில் சிவபெருமான் பார்வதி தேவி நேரில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் என்பது ஐதீகம். சூரபத்மனையும் தரகாசுரனையும் அழித்து முருகப்பெருமான் வெற்றி பெற வைக்கத்துஅஷ்டமி அன்று சிவபெருமானே நேரடியாக அன்னதானம் செய்ததாக தல புராணங்கள் கூறுகின்றன . வைக்கத்து அஷ்டமி தினத்தில் அன்னதானம் செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. இந்த அன்னதானத்தில் சிவபெருமான் பார்வதி தேவி ஆகியோர் உணவு உட்கொள்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டால் சகல விதமான நோய்களும் நீங்கி அனைத்து நலனும் பெற்று தீமைகள் எல்லாம் விலகி சகல நன்மைகளும் உண்டாகும். இந்த நிகழ்வானது இன்று காலை 5.30 மணியளவில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து சங்கல்பம் நடந்தது. யாச ஜெபம், ருத்ர ஜபம், ஆவர்த்தி, அபிஷேகம் ஆகிய நடைபெற்றது. நிறைவாக மகாதீபாரதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.