பைரவாஷ்டமி; மதுரையில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை.. திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2025 12:12
மதுரை; மதுரையின் பிரசித்தி பெற்ற ஸ்தலமான கூடல் நகர் காரிய சித்தி விநாயகர் கோவிலில் பைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இன்று கால பைரவாஷ்டமியை முன்னிட்டு, காரிய சித்தி விநாயகர் கோவிலில் அருள் புரிந்து வரும் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் தீப ஆராதனைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பைரவாஷ்டமி பூஜைகள் துவங்கின. தொடர்ந்து ஸ்ரீ ருத்ர ஜெபம் நடத்தப்பட்டது. காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து துலாபாரம் நடத்தப்பட்டு பூஜைகள் நிறைவு பெற்றன. இந்த பைரவாஷ்டமி விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.