ஒரு காலத்தில் நகரத்துக் குழந்தைகள் தான், தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்றனர். இப்போது பத்தமடை உள்ளிட்ட கிராமப்புறத்து குழந்தைகளும் மாநில தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. 1 லட்சம் பணம் கட்டி, முதல் மதிப்பெண் பெறுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல! ஆனால், அடிப்படை வசதிகள் குறைந்த அரசு பள்ளியில் படித்த மாண வர்கள் வெற்றி பெற்றது பாராட்டுக்குரியதாகும்.தங்களிடம் திறமை உள்ளது என்பதை கிராமத்திலுள்ள மற்ற பிள்ளைகளும் தெரிந்து கொள்ள வேண்டும். குர்ஆனில் அல்லாஹ் கூறும் செய்தி.பார்க்கும் கண்களை உடையீர்! படிப்பினை பெறுவீர் என்று. ஆம்...நீங்கள் கிராமத்து பிள்ளைகளின் முன்னேற்றம் பற்றி இப்போது தெரிந்து கொண்டீர்கள். உங்கள் கண்ணால் பார்த்து விட்டீர்கள். அவர்களைப் போல் நீங்களும் சிறப்பாகப் படியுங்கள். தீவிரமாக உழையுங்கள். உங்கள் கிராமத்தின் பெயரையும் உலகறியச் செய்யுங்கள்.