திண்டிவனம்: நொளம்பூர் சாய்ராம் நகரில் ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திண்டிவனம் தாலுகா நொளம்பூர் கிராமத்தில் சாய்ராம் நகரில் ஷீரடி சாய் பாபா கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று காலை 6 மணிக்குமேல் சாய்பாபாவிற்கு அபிஷேகம் நடந்தது. காலை 9 முதல் 10.15 மணிக்குள் ஷீரடி சாய்பாபா சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.