புதுச்சேரி: முத்தியால்பேட்டை, தெபாஸ்தான்பேட்டையில், வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, பக்த ஆஞ்ஜநேய சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்ஜநேயர் சன்னதி மகா சம்ப்ரோஷணம் நேற்று காலை நடந்தது. மாலையில், வேணுகோபால சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.