மயிலம்: செண்டூர் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தில் அக்னி வசந்த விழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டி கொடியேற் றத் துடன் துவங்கியது. தின சரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் மகா தீபாரதனைகள் நடந்தது. இரவு 9 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீதியுலாக காட்சி நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல் 12 மணிக்கு அம்மனுக்கு நடந்த மகா தீபாரதனை வழிபாட்டில் தரிசனம் செய் தனர். மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில், ஒரு வாரமாக விரதமிருந்து தீமிதித்தனர். இரவு 8 மணிக்கு திரவுபதையம்மன் பக்தர்களுக்கு அரு ள்பாலித்தார். இரவு 9 மணிக்கு மின் விளக்குகளினால் அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா காட்சி நடந்தது. மயிலம், கரசானுõர், நெடி÷ மாழினுõர், கூட்டேரிப்பட்டு, பாலப்பட்டு, விளங்கம்பாடி உட்பட பல கிராமங்களிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.