19ம் நுாற்றாண்டில் வசித்த புகழ்பெற்ற சட்டமேதையான ஷைகு முர்தஜா அன்சாரி(ரஹ்) என்பவரின் தாயாரிடம் சில பெண்கள், “அம்மையாரே! தங்கள் மகன் சிறந்த சட்ட மேதையாகத் திகழ்கிறார். இப்படிப்பட்ட திருமகனைப் பெற்றதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும்,” என்றனர்.அதற்கு அந்தத்தாய், “நீங்கள் பாராட்டிய முறை சரியல்ல. என் மகன் இந்தளவுக்கு சிறந்த மேதையாகத் திகழக் காரணம் என் வளர்ப்பு முறை என நீங்கள் எண்ணலாம். ஆனால், நமது மார்க்கம் சொல்லியிருக்கிறபடி, நான் ’ஒளு’ செய்த பிறகே (உடம்பையும் மார்பையும் சுத்தம் செய்த பிறகே குழந்தைகளுக்கு பாலுாட்ட வேண்டும் என்ற அறிவுரையின்படி) என் ஷைகுவுக்கு பால் கொடுத்தேன். அந்த மார்க்கப்பற்றே அவனது வளர்ச்சிக்கு காரணம்,” என்றார்.மார்க்கம் சொல்வதில் தீர்க்கமான நம்பிக்கை கொண்டவர்கள் வாழ்வில் பின்தங்குவதில்லை. அது மட்டுமா! சுத்தமும், சுகாதாரமும் இந்த தகவல் மூலம் நமக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், இந்த அறிவுரையை அவசியம் கடைபிடியுங்கள். இதனால் சுத்தத்தை பேணுவது என்பது மட்டுமல்லாமல், குழந்தைகள் நல்லறிவுடன் வளரவும் காரணமாக இருப்பீர்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.23