சென்னை: சென்னை, அம்பத்தூர் கமலாபுரம் சாய்பாபா கோயிலில் குரு பூர்ணிமா வியாசர் பூஜை விழாவில் ஷீரடி சாய் பாபா சிம்ம வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஓம் ஸ்ரீ சமர்த்த சத்குரு சாய்நாத் மந்திர் சார்பில் ஆரத்தி, பஜனை, அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் சாய் செல்வகுமார் செய்திருந்தார்.