Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைஷ்ணவ தேவி கோவிலுக்கு இன்று முதல் ... குரு பூர்ணிமா வியாசர் பூஜை விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2014
12:07

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, தமிழகத்தில் சிலைகள் தயாரிப்பு துவங்கி, சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வால், சிலைகளின் விலை, 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களில், விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா, ஆகஸ்ட் 29ல், கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு, ஒரு வாரத்துக்கு முன் தமிழகம், மகாராஷ்டிரா மாநிலங்களில் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படுவது வழக்கம்.

தடைவிதிப்பு:
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தமிழகத்தின் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் சிலை, தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலப் பொருளில், சிலைகள் தயார் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்துள்ளதால், கிழங்கு மாவு, களி மண்ணால் ஆன சிலைகள், அதிக அளவில் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அரை அடி முதல், 15 அடி உயரம் வரை, பல்வேறு அளவுகளில், விதவிதமான வடிவில் சிலைகள் தயாராகி வருகின்றன. விநாயகர், மயில், அன்னம், சிங்கம், புலி, யானை, பெருச்சாளி, சிறுத்தை என, பல்வேறு விலங்குகளில் அமர்ந்த, நின்ற நிலைகளிலும், மயில், அன்னப்பறவை உள்ளிட்ட பறவைகளில் பயணம் மேற் கொள்வது போன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

புதிய வரவாக...: சிவன், விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட கடவுள்களின் மடியில், அமர்ந்த நிலையில் அருள் பாலிப்பது போலவும், புதிய வரவாக, மூன்று அரக்கர்களை வதம் செய்யும் விநாயகர், முருகன் மடியில் விநாயகர், ஆலிழை கண்ணன் தோற்றத்தில் விநாயகர், ரங்கநாதர் துயில் கொள்வது போன்ற விநாயகர் என, மாறுபட்ட வடிவங்களில் சிலைகள் தயாராகி வருகின்றன. கிழங்குமாவு, பேப்பர், சிமென்ட் பேப்பர், டிஸ்டம்பர், வாட்டர் கலர் ஆகியவற்றின் விலை உயர்வு, தொழிலாளர்களுக்கான சம்பளம் உயர்வு ஆகியவை காரணமாக, சிலைகளின் விலையை, 20 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர். விலை உயரும்:கடந்த ஆண்டு, அரை அடி முதல், 15 அடி உயரம் கொண்ட சிலை, 60 ரூபாய் முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை, விற்பனையானது. தற்போது அதே அளவுள்ள சிலை, 80 ரூபாய் முதல், 1௫ ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. புதிய வரவான கிருஷ்ணன் தவழ்வது போல், விநாயகர் தவழும் நிலையில், உருவாக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ஒரு அடி உயரம் கொண்ட சிலை, 800 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நெருங்கும் போது, மேலும் விலை உயரும் என, உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழாவில், கருட வாகனத்தில், பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar