நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி பிரமோற்சவ தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2014 12:07
சிவகாசி : திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனிப்பிரமேற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 13 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. இத் திருவிழாவில் நின்ற நாராயணப்பெருமாள்- செங்கமலத்தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தனர். நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நின்ற நாராயணப்பெருமாள்- செங்கமலத்தாயார் எழுந்தருளினர். பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என கோஷமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். காலை 9.10 மணிக்கு புறப்பட்டு ரதவீதி வழியாக தேர் ஆடி அசைந்து வந்தது கண் கொள்ளாகாட்சியாக இருந்தது. முன்னதாக தேரினை, ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் அறங்காவல் குழுத்தலைவர் ரவிச்சந்திரன், திருத்தங்கல் நகராட்சி தலைவர் தனலட்சுமி கணேச மூர்த்தி, துணைத்தலைவர் சக்திவேல், முன்னாள் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன், கோயில்நிர்வாக அதிகாரி முருகன் ஆகியோர் வடம் பிடித்த இழுந்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் ரதவீதி வழியாக தேரை இழுத்து சென்றனர். தேர் காலை 10.45 மணிக்கு நிலைக்கு வந்தது.