திருப்பரங்குன்றம் கோயிலில் ஓராண்டில் ரூ.36 லட்சத்திற்கு நெய்விளக்குகள் விற்பனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2014 12:07
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஓராண்டில் நெய்விளக்குகள் விற்பனை மூலம் 36 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. திருவாட்சி மண்டபம், சனீஸ்வரபகவான், தட்சிணாமூர்த்தி சன்னதிகள், ஆஸ்தான மண்டபங்களில் நெய்தீபம் விற்பனை 30 ஆண்டுகளாக தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு நடந்தது.இதில் புகார்கள் எழுந்ததால், 2013--14ம் ஆண்டிற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டு, நெய்விளக்கு விற்பனையை கோயில் நிர்வாகம் ஏற்க முடிவானது. 2013 ஜூலை முதல் நெய்விளக்கு விற்பனை நடக்கிறது. இந்த விற்பனை மூலம் ஓராண்டில் மட்டும் 36 லட்சத்து 71 ஆயிரத்து 130 ரூபாய் வருவாய் கிடைத்தது. கடந்தாண்டு நெய்விளக்கு விற்பனை தனியாருக்கு 11 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டிருந்தது.