பதிவு செய்த நாள்
15
ஜூலை
2014
12:07
ஈரோடு: ஈரோடு மாவட்டம், முள்ளாம்பரப்பு அருகே நல்லாந்தொழுவு என்ற இடத்தில் உள்ள ஸ்ரீகரியகாளியம்மன், ஸ்ரீராகுபகவான் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி பரிகார சிறப்பு யாகம் நடந்தது. கொங்கு நாட்டின், 24 நாடுகளில் புகழ்பெற்ற பூந்துறை நாட்டின் காவல் தெய்வமாக இக்கோவில் விளங்குகிறது. தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில், ராகுபகவானுக்கு தனிக்கோவிலும், இங்கு ஒன்பது வகையான ராகுபகவான் அருள்பாலிக்கிறார். ஒன்பது குணங்களுடைய ராகுபகவானை, ஒருசேர தரிசிக்கும் பாக்கியம் அங்கு கிடைக்கிறது. இங்கு, கொங்கணாபுரம் குருஜி ஸ்ரீசாய்ரமேஷ்சிவா தலைமையில், ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பரியார யாகத்தில், மண் சொப்பு கலசம் வைத்து, கலச பூஜை செய்தனர்.