பதிவு செய்த நாள்
15
ஜூலை
2014
12:07
குடிப்பழக்கம் மிகவும் அதிகமாகி விட்ட காலம் இது. இந்த சமயத்தில், இந்த சிந்தனை மிகவும் அவசியமானது. ஒருமுறை, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம், தைலம் ஷர்ரி (ரலி) என்ற தோழர் வந்தார். "இறை தூதே! நாங்கள் குளிர்பிரதேசத்தில் வசிப்பவர்கள். குளிரைப் போக்க மதுவை அருந்துகிறோம்,” என்றார். அவரிடம் நாயகம் அவர்கள், "அந்த மதுவில் போதை இருக்கிறதா?” என்றார்கள். . ஆம் என பதிலளித்த தோழரிடம், "அப்படியானால், நீங்கள் அதனைக் குடிக்கக்கூடாது,” என்றார்கள். "சரி... நான் குடிக்கவில்லை. ஆனால், மக்கள் கேட்க மாட்டார்களே,” என்று தோழர் சொன்னதற்கு, "அப்படியானால் குடிப்பவர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்,” என்றார்கள். மதுபானம் அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும். மது அருந்துபவன் தொழுகையை விட்டு விடுவான். ஒருமுறை மது அருந்திய ஒருவரை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் முன் கொண்டு வந்தனர். அவர்களிடம் நாயகம், "இவரை அடியுங்கள்,” என்றார்கள். உடன் வந்தவர்கள் அவரை அடித்தனர். குடிப்பழக்கம் உள்ளவர்கள் சிந்தியுங்கள். இந்த நோன்பு முதலாவது, மதுவை விட்டுவிடுங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.23