விநாயகருக்கு படைக்கப்படும் கொழுக்கட்டை, அவரது தம்பியான ஐயப்பனுக்கும் படைக்கப்படுகிறது. இந்த அதிசயம் திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கருங்குளம் ஐயப்பன் கோயிலில் நடக்கிறது. பங்குனி உத்திர திருநாளில் படைப்பதற்காக, ஆண்கள் தங்கள் வாயில் துணியை கட்டிக்கொண்டு, 63 கிலோ பச்சரிசியை உரலில் இடிக்கிறார்கள். பின் அந்த மாவால் ஒரே கொழுக்கட்டையாக தயாரித்து படைக்கிறார்கள்.