பந்தள மகாராஜாவின் அரண்மனையிலிருந்து மகர விளக்கு பூஜையை ஒட்டி ஐயப்பனுக்கு ஆபரணங்கள் எடுத்து செல்லப்படும். இந்த ஆபரணப்பெட்டியில் தங்க மகுடம், கடகம், ஹாரம், நூபுரம், கடிஞாண், பாதசதங்கை, அங்குலீயம், பதக்கம் ஆகிய தங்கம் மற்றும் ரத்தினக்கற்கள் பதித்த நகைகள் இருக்கும். மகர விளக்கு அன்று இந்த நகைகள் அணிந்த பிறகே நடை திறக்கப்பட்டு, பூஜை செய்யப்படும். அப்போது பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதியாக காட்சி தருவார். அப்போது அவர் அணிந்து இருக்கும் நகைகளின் பெயரை சொல்லி வழிபட்டால் ஐயப்பனின் அனுக்கிரகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.