பதிவு செய்த நாள்
16
ஜூலை
2014
12:07
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மலைக்கோவிலில், ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நாளை நடக்கிறது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில், ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, ஸ்வாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் புருஷோத்தமன் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
* காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடத்தில் உள்ள ஸ்ரீவேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில், ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, ஸ்வாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை குருக்கள் மோகன்குமார் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
* தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில், எஸ்.வி., ரோடு அங்காளம்மன் கோவில், கோட்டை காமாட்சியம்மன் கோவில், குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில், அன்னசாகரம் மாரியம்மன் கோவில் மற்றும் அங்காளம்மன் கோவில், நெசவாளர் நகர் சவுடேஸ்வரி அம்மன் கோவில், அப்பாவு நகர் மாரியம்மன் கோவில், பிடமனேரி மாரியம்மன் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உட்பட மாவட்டத்தில், அனைத்து அம்மன் கோவில்களிலும், ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் ஆகியவை நடக்கிறது.