நாலு பேர் மெச்ச வாழணும்.. யார் அந்த நாலு பேர் தெரியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2014 04:07
நாலுபேர் மெச்ச வாழணும் என்ற ஆசை எல்லாருக்குமே இருக்கிறது. உலகம் நம்மை பாராட்டணும் என்ற விருப்பம் நியாயமானதும் கூட. ஆனால், வெளியாட்களின் பாராட்டை விட, நம்மை நிஜமாகவே பாராட்டவேண்டிய நாலு பேர்யார் தெரியுமா?மாதா, பிதா, குரு, தெய்வம். இவர்கள் தங்கள் உள்ளம் குளிர்ந்து பாராட்டினால், மற்றவர்களின் பாராட்டுதானாகவே நம்மை வந்து சேரும். இதே போலபெரியவர்கள், நாலு பேர் போன பாதையில் போ! என்று இளைய தலைமுறைக்கு வழிகாட்டுவார்கள். அந்த நாலுபேரையும் சிவன் கோயிலுக்குச் சென்றால் தரிசிக்கலாம். ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரே அந்த நால்வர். அவர்கள் சென்ற பாதை நல்ல பாதை. அவர்களைப் போல சிவ சிந்தனையோடு வாழ்ந்தால் நமது வாழ்வு சிறக்கும்.