பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
05:07
அட! என்னைய்யா அநியாயமா இருக்கு! அவளோட பேரை மட்டும் தான் சொல்றதுக்கு எங்க வீட்டிலே அதிகாரமே இருந்துச்சு! அதுக்கும் வேட்டு வைச்சுட்டீரே! நீர் நல்லாயிருப்பீரா! என்று தலைப்பைப் படித்தவர்கள், திட்ட ஆரம்பித்திருப்பீர்கள். கொஞ்சம் பொறுங்க! விஷயத்தை முதலில் தெரிஞ்சுக்கிடுங்க! அந்தக் காலத்து சினிமா பார்த்திருக்கீங்களா! மனைவியிடம் கணவன் தேவி என கசிவார். அந்த அம்மையார் நாதா என உருகுவார். இதெல்லாம் விளையாட்டுக்கு இல்லே! சாஸ்திரப்படி தான், அப்படி சொன்னாங்க. பொதுவாக, வயது அதிகமானவர்களை பெயர் சொல்லி அழைக்கக்கூடாது என்பது மரபு. உறவுமுறை சொல்லி தான் அழைக்க வேண்டும். அதன்படி,கணவனின் பெயரை மனைவி சொல்லக்கூடாது.
அப்படியானால், கணவனை மனைவி எப்படி தான் அழைப்பதாம்! மாமா, அத்தான் என்று உறவு முறை சொல்லி அழைக்கலாம். அப்படி சொல்லும் வழக்கமில்லை என்றால், தங்கள் குழந்தைகளின் பெயரால், ஆகாஷ் அப்பா, கிருஷ்ணப்பா, சாந்தி அப்பா, வசந்தியப்பா என்று கூப்பிடலாம். ஆனால், மனைவியின் பெயரை கணவன் சொல்லவே கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. இவர்களுக்கு என்ன பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, ராதா என்று பெண் தெய்வங்கள் ஒன்றின் பெயரால் தான், அவர்களை அழைக்க வேண்டுமாம்! அட போங்க சாமி! நீங்க டிவியிலே சீரியலே பாக்கிறது இல்லியா! சரவணா, மாதவாங்கிற காலமெல்லாம் போய், புருஷனை வாடா, போடாங்கிற ÷ ரஞ்சுலே போய்கிட்டு இருக்கு! இந்த நேரத்தில் இதுமாதிரி நியூஸெல்லாம் போட்டு, பொம்பளைங்கள வெறுப்பேத்துறீங்களே! என்கிறீர்களா! சாஸ்திரம் சொல்றதை நாங்க சொல்லிட்டோம்! அதை பாலோ பண்றதும், பண்ணாததும் உங்க இஷ்டம்!