திரவுபதி அம்மன் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2014 12:07
திருப்போரூர்: கண்ணகப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருப்போரூர் அடுத்த, கண்ணகப்பட்டில் பழமை யான திரவுபதி அம்மன் கோவில் தீமிதி பெருவிழா, நேற்று காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து, தினசரி மாலை முதல் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது. பிரதான தீ மிதி விழா, வரும் ஆகஸ்ட் 3ம் தேதி மாலை நடைபெறுகிறது. 4ம் தேதி மாலை தர்மர் பட்டாபிஷேகத்துடன் பெருவிழா நிறைவடைகிறது.