பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
05:07
*நன்மை நடந்தால் மகிழ்பவர்கள், தீமை நிகழ்ந்தால் இறைவன் இருக்கிறானா என சந்தேகிக் கின்றனர். ‘கடவுள் எப்படி இவ்வாறு தவறு நடக்க அனுமதிக்கிறார்?’ எனவும் கேட்கின்றனர்.
*உண்மையில் உலகில் நன்மை, தீமையென்று எதுவுமே கிடையாது. இன்று நன்மையாக தெரிவது, நாளை தீயதாகவும், இப்போது தீமையாக இருப்பது சிலகாலம் கழித்து நல்லதாகவும் மாறி விடும்.
*உலகில் நடக்கும் எந்த சிறிய செயலும் இறைவனுக்கு தெரிந்தே நடக்கிறது. அவருக்கு தெரியாமல் எதுவும் இம்மியளவு கூட, அசைவதில்லை. இயற்கையாக நிகழும் செயலை, நமது சிறிய அறிவிற்கு ஏற்ற வகையில் நல்லது என்றும், தீயது என்றும் பிரித்துப் பார்க்கிறோம்.
*நாம் காணும் ஒவ்வொன்றும் உள்ளத்தைப் பொறுத்தே அமைகிறது. மனம் நல்லதை நினைத்தால், பார்க்கப்படுவது தீயதாக இருந்தாலும், அதிலுள்ள நன்மை மட்டுமே தெரியும்.
*மனம் தீயவற்றை எண்ணி கொண்டிருக்கும்போது, நல்லதை பார்த்தாலும் தீயதாகவே தெரியும். மொத்தத்தில் அனைத்தும், அவரவர் பார்வைக்கு ஏற்பவே தெரியும். அனைத்தும் நன்மையாகவே நடக்க விரும்பினால், முதலில் மனதை நல்லதாக வைத்துக் கொள்ளுங்கள்.
*முற்றும் உணர்ந்த ஞானியின் மவுனத்தைக் காட்டிலும், சிறந்த உபதேசம் வேறொன்று கிடையாது.
*நுõல்களைப் படித்தாலும், பலருடைய உபதேசத்தைக் கேட்டாலும் கூட மனதில் தெளிவு உண்டாகாது. சத்தியத்தை முழுமையாக அறிந்தவர்களுக்கு மட்டுமே தெளிவு கிடைக்கும்.
*மனம் உருகி கடவுளை வழிபட்டால், எத்தகைய கொடிய துன்பமும் நீங்கி விடும்.
*உங்களிடம் ஏதாவது நிறை இருக்குமானால், அதற்கு காரணம் கடவுளின் அருள் என்று நினையுங்கள். இதனால், ‘தான்’ என்ற அகம்பாவம் மறையும்.
*பணியில் குறை நேர்ந்தால், என்னுடைய முயற்சியின்மையே காரணம் என சொல்லுங்கள். இதனால், உங்களைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்புண்டாகும்.
*பக்தியோடு பாடி வழிபடுவதே அவருடைய அருளைப் பெற எளிய வழியாகும்.
*மனதில் தெய்வ நம்பிக்கை ஆழமாக இருந்தால், கண்ணில் அன்பு ஊற்றெடுக்கும். அப்போது, கல்லில் இருக்கும் தெய்வத்தோடும், நாம் பேசிஉறவாடலாம்.
*வேதம், சாதுக்கள், பசுக்கள் இவர்களை காப்பாற்றி விட்டால், உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் நன்மை உண்டாகும்.
* எந்த அளவுக்குப் பேச்சு குறைகிறதோ, அந்த அளவுக்கு மனம் ஒருமுகப்பட்டு தியானத்தில் ஈடுபடும்.
*தியானத்தில் ஈடுபாடு கொள்ள பொறுமையும், விடாமுயற்சியும் அவசியம் தேவை.
* விருப்பத்துடன் நம்மை முழுமையாக கடவுளிடம்ஒப்படைப்பதே சரணாகதி.
* முன்வினைப்பயனைப் பொறுத்தே நம் செயல்கள் அமைகின்றன. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
*மருந்து சாப்பிட குழந்தை மறுத்தாலும், தாய் வலுக்கட்டாயமாக கொடுப்பாள். அதுபோல, நல்ல விஷயங்களை சிறுவயதிலேயே குழந்தைகளிடம் நிர்பந்தமாக உண்டாக்க வேண்டும்.