பரமக்குடி பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோத்ஸவம் ஆக.10ல் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2014 12:07
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோத்ஸவம், ஆக., 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து அன்ன, சிம்ம, சேஷ, கருட, அனுமார், குதிரை, பல்லக்கு வாகனங்களில் பெருமாள் வீதியுலா நடைபெறுகிறது. ஆக.,7ம் தேதி இரவு 7 மணிக்கு பெருமாள் யானை வாகனத்தில் அலங்காரமாகி, ஆண்டாளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி, ஆக.,10 காலை 10.35 முதல் 11.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.