கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2014 12:07
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை விழா நேற்று காலை சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர். சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். எட்டு பட்டி கோவில்களில் மிக முக்கியமான கோவிலாக கருதப்படுகிறது. கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பண்டிகை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த முறையில் இந்தாண்டு ஆடிப்பண்டிகை, நேற்று காலை சிறப்பு அபிஷேகத்துடன் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து வரும் 22ம் தேதி பூச்சாட்டுதல் விழா நடக்கிறது. 29ம் தேதி கம்பம் நடுதல் விழா நடக்கிறது. ஆகஸ்ட் 3ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 4ம் தேதி சக்தி அழைப்பு, 5ம் தேதி சக்தி கரகம், அதனை தொடர்ந்து 6, 7, 8 ஆகிய தேதிகளில் பொங்கல் இடும் நிகழ்ச்சியும், உருளுதண்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9ம் தேதி காலை கம்பம் கங்கையில் சேர்தல், 10ம் தேதி சத்தாபரணம், 11ம் தேதி வசந்த உற்சவம், 12ம் தேதி பால்குடவிழா மற்றும் அபிஷேகம் ஆகிய விழாக்களுடன் விழா நிறைவடைகிறது.