விழுப்புரம்: கோலியனூர் நவநீத ஆஞ்சநேயர் கோவிலில் நாளை முதல் ராமாயண தொடர் சொற்பொழிவு நடக்கிறது. கோலியனூர் தர்ம ரஷண சமிதி மற்றும் பலிஜ மகாஜன சங்கம் சார்பில் ராமாயண ஞான வேள்வி தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, நாளை(19ம் தேதி) துவங்குகிறது. கோலியனூர் நவநீத ஆஞ்சநேயர் கோவிலில் தினமும் மாலை 6: 00 மணி முதல் இரவு 8:30 மணி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் ராமாயணம் அறிமுகம், தொடர்ந்து பால காண்டம், அயோத்தியா காண்டம், சீதா கல்யாணம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் மற்றும் ராமர் பட்டாபிஷேகமும் நடந்தது.