செஞ்சி: மேலச்சேரி பச்சையம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. செஞ்சி தாலுகா மேலச்சேரியில் காட்டின் நடுவே உள்ள பச்சையம்மன் கோவிலில் ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு பச்சையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். செவலபுரை திரவுபதியம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பு மற்றும் அக்னி வசந்த உற்சவத்தின் 2ம் நாள் விழாவாக சிவன் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். செவலபுரை, சித்தாத்தூர், மேல்மன்னூர், தாதிகுளம், ராமகிருஷ்ணாபுரம், தாதங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.