தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், கருவறையில் உள்ள பிரமாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்து ஆராதனை நடந்தது. பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். கோவில் தர்மகர்த்தா கோவிந்தசாமி, பாஞ்சாலை, கண்ணன், பூசாரிகள் தமிழ்செல்வன், குமார், நாராயணன், சங்கர் பூஜைகளை செய்தனர்.