திருவெண்ணெய்நல்லூ: திருவெண்ணெய்நல்லூர் வனரேணுகாம்பாள் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு நேற்று சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தன காப்பும் நடந்தது. காலை11:00 மணிக்கு சக்தி கரக ஊர்வலம், மதியம் 12:15 மணிக்கு சாகைவார்த் தலும் நடந்தது. அப்போது பெண்கள் கஞ்சி கலயங்களை கொண்டு வந்து அம்மனுக்கு படையலிட்டனர். இரவு 7:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் செய்திருந்தார். வாணக்கொட்டகை தெருவிலுள்ள துர்க்கையம்மனுக்கு நேற்று சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.