பெரியபாளையத்தம்மன் கோவில் ஆடித் திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2014 02:07
புதுச்சேரி: முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.அதையொட்டி, காலை 7:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. மாலை 6:00 மணிக்கு, வேப்பிலை ஆடை அணிந்து பால்குட ஊர்வலமும், தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகமும் நடந்தது.இன்று (19ம் தேதி) இரவு நாகவாகனத்தில் அம்மன் வீதியுலா, நாளை காலை 9:00 மணிக்கு சக்தி கரகம் வீதியுலா, பகல் 12:௦௦ மணியளவில் பாற்சாகை வார்த்தல், மாலை 3:00 மணியளவில் தேர் பவனி நடக்கிறது. 23ம் தேதி முத்துப்பல்லக்கு, 24ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 25ம் தேதி சீர்கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.