பதிவு செய்த நாள்
21
ஜூலை
2014
12:07
ஆர்.கே.பேட்டை : நல்லுார், நரசுராஜி கண்டிகை, பாமா ருக்மணி உடனுறை கிருஷ்ணர் கோவில் மண்டலாபிஷேகம், நேற்று முன்தினம் நடந்தது. உற்சவர் சீனிவாச பெருமாள், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆர்.கே.பேட்டை அடுத்த, நல்லுார், நரசுராஜி கண்டிகை, பாமா ருக்மணி உடனுறை கிருஷ்ணர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஜூன் 8ம் தேதி, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினசரி அபிஷேகம் நடந்து வந்தது. நேற்று முன்தினம் மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றது.காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணியளவில், வங்கனுார் பஜனை கோஷ்டியினரின் அரிகதா நாட்டிய பஜனை நடத்தப்பட்டது. 7:00 மணியளவில், உற்சவர் சீனிவாச பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் வீதியுலா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10:00 மணியளவில், கிருஷ்ணலீலை நாடகம் நடந்தது.