பதிவு செய்த நாள்
21
ஜூலை
2014
12:07
திருத்தணி : ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று நடந்த மண்டலாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.திருத்தணி ஒன்றியம், தலையாரிதாங்கல் கிராமத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று மண்டலாபிஷேக விழா நடந்தது. விழாவை ஒட்டி, காலை, 9:00 மணிக்கு ஒரு யாகசாலை, 27 கலசங்கள் அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து யோகநந்த சுவாமி, சாயி தத்த ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் ம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடத்தினார்.பின், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர், ஆந்திர மாநில அனுமான் உபாசகர் பரிடால பாபா சாயிராம், குழுவினரின் அனுமான் சாலீசா அகண்ட பஜனைகள் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் ஷீரடி சாய்பாபா பல்லக்கு சேவையில் எழுந்தருளி கோவிலை சுற்றி ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.