பெரம்பலூர் கீழப்புலியூர் மாரியம்மன் கோயில் பால்குட விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2014 04:07
பெரம்பலூர் அருகேயுள்ள கீழப்புலியூர் மாரியம்மன் கோயிலில் ஆடி மாத விழாவையொட்டி, அக்னிச் சட்டி மற்றும் பால்குடம் எடுத்தல் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. நிகழாண்டுக்கான விழாவை முன்னிட்டு, சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்தது. தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்டோர் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காக அக்னிச் சட்டி மற்றும் பால்குடம் எடுத்து கீழப்புலியூர் கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாகச் சென்று கோயில் வளாகத்தை அடைந்தனர்.அங்கு மாரியம்மனுக்கு பாலஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.இதில் கீழப்புலியூர், செங்குணம், வாலிகண்டபுரம், வாலிகண்டபுரம், புதூர் உள்பட பல்வேறு கிராமப் பொதுமக்கள் பங்கேற்றனர்.