பர்கூர் மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா திரளான பக்தர்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2014 04:07
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காரகும்பம் சாலையில் அரசமரத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் முதல் வெள்ளிக் கிழமை அன்று திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் படி 12-ம் ஆண்டு ஆடி முதல் வெள்ளித்திருவிழா கடந்த 15-ந் தேதி அன்று அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர் மகா கணபதி ஹோமம் நடை பெற்றது.தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல், கொடிமரம் நடுதல் போன்றவை நடை பெற்றது. இதைதொடர்ந்து பால்குடங்கள் எடுக்கும் பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள். 17-ந் தேதி அன்று விநாயகர் பூஜை, நவசண்டி ஹோமம் மற்றும் முதல்கால பூஜை நடை பெற்றது.பூக்கூடைகள் ஊர்வலம்நேற்று முன்தினம் பர்கூர் பாரத கோவிலில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, பூக்கர கத்துடன் பூக்கூடைகள் ஊர் வலமும், பால்குட ஊர்வலமும் புறப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய பகுதிகளின் வழியாக அரசமரத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்ததும் 2-ம் கால பூஜை மற்றும் மகாசண்டி யாகம் நடை பெற்றது.பின்னர் அம்மனுக்கு பக்தர் கள் குடங்களில் சுமந்து வந்த பாலைக்கொண்டு பாலா பிஷேகம் செய்யப்பட்டது. தொடந்து மாலையில் திரு விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு பூக்கூடைகளில் சுமந்து வந்த பூக்களைக்கொண்டு பூச் சொரிதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்று மாலையில் அம்மன் திருவீதி யுலா வரும் காட்சி நடைபெற் றது. நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.