திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூர கொடியேற்ற விழா நேற்று நடந்து. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்று விழா நேற்று நடந்தது. விழானை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கொடியேற்றம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உற்சவ விழாவில் நிறைவாக வரும்,30ஆம் தேதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.