சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு காளியம்மன் கோவிலில் ஊரணி பொங் கல் நிகழ்ச்சி நடந்தது. சங்கராபும் வட்டம் புதுப்பட்டு காளியம்மன் கோவிலில் நேற்று முன் தினம் ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.