திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் வெண்ணெய்வேலவர் கோவிலில் நேற்று ஆடி கிருத்திகை விழா சிறப்பாக நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் வெண்ணெய்வேலவர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 9:30 மணிக்கு காவடி பூ ஜையும், மதியம் 12:00 மணிக்கு மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மாலை 5:30 மணிக்கு கருவறையிலுள்ள முருகன், வள்ளி, தெய்வானைக்கு சந்தனக்காப்பு அலங்காரம், இரவு 9:00 மணிக்கு மயில்வாகனத்தில் திருவீதியுலா நடந்தது.