செஞ்சி: செஞ்சி பி. ஏரிக்கரை சுப்பிரமணியர் கோவிலில் மார்க்கெட் கமிட்டி நெல், அரிசி, மணிலா வியாபாரிகள் மற்றும் எடை பணி தொழிலாளர்கள் சார்பில் ஆடி கிருத்திகை விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து பால் குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். 9.30 மணிக்கு அக்னி சட்டி ஊர்வலம். 10 மணி முதல் 12 மணிவரை சக்தி வேலுக்கு அபிஷேகம் நடந்தது. பகல் 1 மணிக்கு பக்தர்களுக்கு மிளகாய் அபிஷேகம், எண்ணை சட்டியில் வடை எடுத்தல், மார்பு மீது மாவிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. 3 மணிக்கு செடல் போட்டு ஆகாயமார்க்கமாக சுவாமிக்கு பூஜை செய்தனர். 4 மணிக்கு தீ மிதித்தனர். 5 மணிக்கு செடல் அணிந்த பக்தர்கள் ஜே.சி. பி., லாரி, வேன், ஆட்டோ, கார் இழுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.