திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கீழையூர் பாலசுப்ரமணியர் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நடந்தது. இதையொட்டி திருக்கோவிலூர், கீழையூர், பாலசுப்ரமணியர் கோவிலில் மூலவர் வள்ளிதேவசேனா சமேத பாலசுப்ரமணியருக்கு காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ராஜா குருக்கள் தலைமையில் வெள்ளி கவசத்தில் சுவாமிக்கு மகா தீபாராதனை, அர்ச்சனை நடந்தது. இதனையடுத்து காவடி ஊர்வலம் நடந்தது. மாலை 6 மணிக்கு லட்சார்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. கோவில் தர்மகர்த்தா ருத்ரப்ப ஆச்சாரி தலைமையில் விஸ்வகர்மா சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.