முருக்கேரி; முருக்கேரி அடுத்த முன்னுர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 7ந்தேதி திரவுபதியம்மன் கோவிலில் கொடியோற்றி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. 10ந் தேதி முதல் தினமும் மகாபாரத சொற்பொழிவும், தெருக்கூத்து நாடகமும், அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் காலை 4.00 மணிக்கு அர்சுனன் தபசு நடந்தது. காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது. முற்பகல் 12.00 மணிக்கு துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது. இரவு 7.30 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது. பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். நேற்று காலை 9.00 மணிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.