பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
04:07
ஆடி கிருத்திகைதமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி எடுத்தும், மொட்டை அடித்தும் நேர்த் திக்கடன் செலுத்தினர். அதன் படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் ஆடி கிருத் திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.தர்மபுரி குமாரசாமிப் பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித் தார். இதில் ஏராளமான பக் தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சாமி திரு வீதி உலா நடைபெற்றது.சின்ன மாட்லாம்பட்டிஇதேபோன்று தர்மபுரி கடைவீதியில் உள்ள சிவ சுப்பிரமணிய சாமி கோவில், அன்னசாகரம் சுப்பிரமணிய சாமி கோவில், நெசவாளர் நகர் வேல்முருகன் கோவில், பாரதிபுரம் சுப்பிரமணிய சாமி கோவில், லளிகம் தண்டாயுதபாணி கோவில், இண்டூர் சுப்பிரமணிய சாமி கோவில், பாப்பாரப்பட்டி பழைய மற்றும் புதிய சுப்பிர மணிய சாமி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சின்னமாட்லாம்பட்டியில் மலை மீதுள்ள பாலமுருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங் காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.கம்பைநல்லூர் சுப்பிரமணிய சாமி கோவில் அரூர், தீர்த்த மலை முருகன் கோவில் மற் றும் பென்னாகரம், காரிமங் கலம், மாரண்டஅள்ளி, மொரப்பூர், பாப்பிரெட்டிப் பட்டி, பொம்மிடி, கடத்தூர், ஏரியூர் உள்ளிட்ட அனைத்து ஊர்களில் உள்ள முருகன் கோவில்களில் ஆடி கிருத் திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.ஆன்மிக பயணம்ஆடி கிருத்திகையை யொட்டி அறுபடை வீடுகளில் 5–ம் படை வீடான திருத் தணிக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக சென்ற னர். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் காவடி எடுத்து திருத்தணிக்கு ஆன்மிக பயணம் சென்றனர். அரூர் பகுதியில் இருந்தும் ஏராள மான பக்தர்கள் திருத்தணிக்கு ஆன்மிக பயணம் மேற் கொண்டனர். அவர்களை அந்தந்த கிராமங்களில் பொது மக்கள் மேளதாளங்கள் முழங்க வழியனுப்பி வைத்தனர்.